A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
சட்டமன்ற தேர்தலில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே மிகவும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு செய்து வருகிறனர். அந்த வாகையில், திரையுலக பிரபலங்களான கமல், ரஜினி, அஜித், சூர்யா, கார்த்தி மற்றும் சிவகாரத்திகேயன் ஆகியோர் வாக்களித்த நிலையில், தளபதி விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு, சைக்கிளில் வந்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
நடிகர் சைக்கிளை வந்து வாக்கு பதிவு செய்துள்ளது தற்போது பேசும் பொருளாகியுள்ளது. பலரும், தளபதி விஜய் பெற்றோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தான் சைக்கிளில் சென்று வாக்களித்ததாக கூறி வருகின்றனர். இதுகுறித்து, ஆயிரம்விளக்கு தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு கூறுகையில், நேரத்தை வீணாக்க கூடாது என்பதற்காகவே நடிகர் விஜய் சைக்கிளில் சென்றதாகவும், விஜய் சைக்கிளில் சென்றதை அரசியலாக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago