Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 169 பேரில், 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
விஜய் மக்கள் இயக்கத்தின் வாயிலாக, பல நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தன. ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவித்த போது, விஜய் ரசிகர்கள் 169 பேர் களத்தில் இறங்கினர்.
'தேர்தல் பிரசாரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, விஜய் பெயர் மற்றும் படத்தையோ பயன்படுத்தக் கூடாது' என அறிவுறுத்தப்பட்டிருந்தது. போட்டியிட்ட 169 பேரில், 110 பேர் வெற்றி பெற்றதாக, மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
'விஜயகாந்த் பாணியில் சினிமாவுக்கு வந்த விஜய், தற்போது அவரைப் போலவே, அரசியலிலும் வெற்றித் தடத்தை ஆரம்பித்துள்ளார்' என்றும், 'ஊரக உள்ளாட்சி தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக விஜய் மக்கள் இயக்கம் உருவெடுத்துள்ளது' என்றும், விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை,ஊரக உள்ளாட்சி தேர்தலில், இருவர் மட்டுமே வெற்றி பெற்று மக்கள் நீதி மய்யத்தின் மானத்தை சற்றுக் காப்பாற்றி உள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., உட்பட அனைத்து கட்சிகளும் தோல்வியடைந்துள்ளன. அதில், கமலின் மக்கம் நீதி மய்யம் கட்சியும் அடங்கும்.
9 minute ago
31 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
31 minute ago
2 hours ago
4 hours ago