2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

விண்ணில் பாய்கிறது PSLV C-50 ரொக்கெட்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 12 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தகவல் தொடர்புக்கான சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-50 ரொக்கெட் எதிர்வரும் 17ஆம் திகதி  விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து அன்றைய தினம் மாலை 3.41 மணிக்கு அந்த ரொக்கெட் செலுத்தப்படவிருக்கிறது.

கொரோனா காரணமாக 11 மாதங்களாக தடை பட்டிருந்த இஸ்ரோவின் விண்வெளி ஆய்வுப் பணிகள், கடந்த மாதம் மீண்டும் தொடங்கப் பட்டது. அதன்படி, பிஎஸ்எல்வி சி-49 ரொக்கெட்டானது கடந்த மாதம் 7ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அதில் இடம்பெற்றிருந்த இந்தியாவின் இஓஎஸ் - 1 செயற்கைக்கோளானது விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டது. அந்த செயற்கைக்கோளில் உள்ள சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் மூலம் அனைத்து பருவநிலையிலும் துல்லியமாக படங்களை எடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது பிஎஸ்எல்வி சி-50 ரொக்கெட் வடிவமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அது எதிர்வரும் 17 ஆம் திகதி  விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது. ஆறு உந்து விசை சக்தியுடன் (6 ஸ்ட்ராப் ஆன்ஸ்) அந்த ரொக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .