Freelancer / 2024 டிசெம்பர் 10 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பையில், திங்கட்கிழமை (9) இரவு, மாநகர மின்சாரப் பஸ் ஒன்று வீதியோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதிய விபத்துக்குள்ளானதில், 3 இளைஞர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்,. 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளர்.
மும்பை - குர்லா மேற்கில் உள்ள எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில், அன்ஜும் இ இஸ்லாம் பள்ளி அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தையடுத்து, பஸ் சாரதி கைது செய்யப்பட்டார். பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாலேயே, இந்த விபத்து சம்பவித்துள்ளதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதலில் அந்தப் பஸ், 4 பேர் மீது மோதியதோடு, 100 மீற்றர் வரை தவறான திசையில் சென்று, இரண்டு முச்சக்கரவண்டிகள், மற்றும் சைக்கிள்களை மோதியுள்ளது.
இதற்கிடையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 இலட்சம் (இந்திய பெறுமதி) நிதியுதவி வழங்க மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
6 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago