A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவில் வாகன விபத்தொன்றில் மரணமான இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஹீரா பானு உள்ளாட்சித் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
கேரள உள்ளாட்சித் தேர்தலில் தலக்காடு கிராம பஞ்சாயத்தின் 15ஆவது வார்டில் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பாக போட்டியிட்ட சஹீரா பானு,விபத்தொன்றில் மரணமானார்.
வேட்பாளர் சஹீரா பானு, தனது பிரதேசத்திலுள்ள வாக்காளர்களிடம் தேர்தல் சீட்டுகளைக் கொடுப்பதற்காக மகனுடன் அமர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வந்த காரில் மோதி விபத்துக்குள்ளானார். இதையடுத்து, சஹீரா பானு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், இதில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளரைக் காட்டிலும் 248 வாக்குகள் கூடுதலாகப் பெற்று சஹீரா பானு வெற்றி பெற்றுள்ளார்.
47 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
59 minute ago