2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

விபரீத முடிவு எடுத்த 700 இந்திய மாணவர்கள்; அச்சத்தில் இந்திய அரசு

Ilango Bharathy   / 2022 மார்ச் 07 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனின் சுமி நகரில் சிக்கி தவிக்கும்  இந்திய மாணவர்கள் எடுத்த விபரீத முடிவால் இந்திய அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

 உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் உக்ரேனின் சுமி நகரில் சிக்கி தவிக்கும்  இந்திய மாணவர்கள் தமது உயிரை காப்பாற்றுவதற்காக , சுமி நகரில் இருந்து தென்கிழக்கில் உள்ள மரியுபோல் நகருக்கு 600 கிலோ மீற்றர்  தூரத்துக்கு நடந்து செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் ” நாங்கள் அச்சம் அடைந்துள்ளோம். நீண்ட நாட்கள் இங்கு காத்திருந்தோம். இனியும் இங்கு  இருக்க முடியாது. எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

  இங்கு கடுமையான குளிர்,மற்றும்  உணவு பற்றாக்குறையால் துன்பப்பட்டு வருகின்றோம் கடந்த ஒரு வாரமாக மின்சாரம், இல்லாமல் தவித்து வருகிறோம்.

இதனால்  சுமி நகரில் இருந்து தென்கிழக்கில் உள்ள மரியுபோல் நகருக்கு 600 கிலோமீற்றர் தூரத்துக்கு நடந்து செல்ல திட்டமிட்டுள்ளோம் . எல்லையில் உள்ள அதிகாரிகள் எங்களை மீட்டு அழைத்து செல்வார்கள் என்று நம்புகின்றோம்.

 எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு அரசும், இந்திய தூதரகமுமே பொறுப்பு” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்  மாணவர்களின் இவ் விபரீத முடிவால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளதோடு  ‘அவசரப்பட்டு வெளியேற வேண்டாம்‘ என்று அவர்களை வலியுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .