2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்

Freelancer   / 2023 நவம்பர் 21 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்திகதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பிரசாரத்திற்கு  இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை செவ்வாய்க்கிழமை (21) வெளியிட்டது.

இந்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதசரா, சச்சின் பைலட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தேர்தல் அறிக்கையில் "விவசாயிகளுக்கு 2 இலட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். சுவாமிநாதன் அறிக்கையின்படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். காங்கிரஸ் 10 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதில் 4 இலட்சம் வேலை அரசு செக்டாரில் ஏற்படுத்தப்படும்.

பஞ்சாயத்து அளவிலான ஆள்சேர்ப்பு திட்டம் கொண்டு வரப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

ராஜஸ்தானின் பொருளாதாரம் இந்த ஆண்டு இறுதியில் 15 இலட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இதனை 2030-க்குள் 30 இலட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதே இலக்கு" உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பிடித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X