A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி :
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் அடுத்தகட்டமாக, விவசாயிகள், இன்று ரயில் மறியலில் ஈடுபடவுள்ளனர். இதனால் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டில்லி எல்லை பகுதிகளில், 70 நாட்களுக்கும் மேலாக, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று பகல், 12:00 முதல், மாலை, 4:00 மணி வரை, நாடு முழுதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக, விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவான, 'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' அறிவித்துள்ளது.
இதையடுத்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படையின், 20 பிரிவினர், கூடுதல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago