A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
டில்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை சிலர் பரப்பி வந்தனர்.
இந்தியா இன ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாக சித்தரித்தும் கருத்துகள் வெளியிடப்பட்டு இருந்தன
இவற்றை காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் உளவுப்படையினர் அனுப்பி இருந்தது தெரிய வந்தது.
டுவிட்டர் தளம் மூலமாக இவற்றை அனுப்பி இருந்தனர். எனவே அந்த கணக்குகளை முடக்கும்படி மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தது.
இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டம் 69 ஏ-ன்படி அவதூறான கருத்துக்களை இணையதளங்கள் மூலமாக வெளியிடுவது கிரிமினல் குற்றமாகும்.
இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்து இருந்தது.
இது சம்பந்தமாக 257 கணக்குகளை முடக்கும்படி ஏற்கனவே மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியது. அதில் 126 கணக்குகளை டுவிட்டர் முடக்கம் செய்தது. அதன் பிறகு இதேபோல் 1,178 கணக்குகளை முடக்கும்படி மீண்டும் கடிதம் அனுப்பி இருந்தது. அதில் 583 கணக்குகளை முடக்கம் செய்து இருப்பதாக டுவிட்டர் நிறுவனம் கூறி இருக்கிறது.
இவற்றில் சில கணக்குகள் நிரந்தரமாக மூடப்படும். மற்ற கணக்குகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026