2025 ஜூலை 16, புதன்கிழமை

விவாகரத்து கோரிய மனைவிக்கு வெட்டு

Freelancer   / 2023 நவம்பர் 23 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் செல்லகெரேவில் பகுதியில் மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றுக்கு சென்றதால் கணவனால் அரிவால் வெட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்தியாவின் சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரேவில் கணவனால் (30) கொடுமைப்படுத்தப்பட்டு வந்த பெண் (26) ஒருவர் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விவாகரத்து கோரி செல்லகெரே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்தநிலையில், மனு தொடர்பாக, நேற்றைய தினம் புதன்கிழமை (22) திகதி விசாரணை நடைபெறவிருந்த நிலையில் இருவரும் நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளனர்.

தன் விருப்பத்துக்கு மாறாக, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு வந்த மனைவியை கண்ட, கணவர் சாலை ஓரம் இளநீர் விற்பவரின் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி, மனைவியை வெட்டியுள்ளார்.

இதை கண்ட அப்பகுதியினர் குறித்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதோடு தாக்குதலுக்குள்ளான பெண் வைத்தியசாலையில் சிகிச்கை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   M 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X