Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜனவரி 07 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாகர்கோவில்:
முளகுமூட்டில் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் வாலிபர் முன் ஆபாசமாக தோன்றிய இளம்பெண் பணம் கேட்டு மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இணையதள மோசடி
குமரி மாவட்டத்தில் இணையதள மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நாகர்கோவிலை சேர்ந்த ஒருவர் செல்போன் வாட்ஸ் அப்பில் வந்த விளம்பரத்தை பார்த்து நாய் வாங்க ரூ.10 ஆயிரத்தை அனுப்பினார். ஆனால் அவருக்கு நாய் கிடைக்கவில்லை. ரூ.10 ஆயிரம் இழப்பு தான் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது அதே பாணியில் மேலும் 3 மோசடிகள் நடந்துள்ளன. இதுபற்றி பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆபாச வீடியோ அழைப்பு
முளகுமூடு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு வீடியோ ஹால் மூலம் அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் அவர் பேசிய போது எதிர்முனையில் ஒரு இளம்பெண் ஆபாசமாக தோன்றி இருக்கிறார்.
இதை சற்றும் எதிா்பார்க்காத அவர் சுதாரிப்பதற்குள் வீடியோ அழைப்பை அந்த பெண் பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த வீடியோவில் வாலிபரையும், பெண்ணையும் ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்ட தொடங்கினார். பணம் கொடுக்கவில்லை எனில் அந்த வீடியோவை முகநூலில் பதிவிடுவதாகவும் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் செய்வதறியாது திகைத்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் நாகர்கோவிலில் உள்ள பொலிஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
போலி நிறுவனம்
இதுபோல் குமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்த ஒருவரின் செல்போன் எண்ணுக்கு பகுதிநேர வேலைவாய்ப்பு என்ற குறுஞ்செய்தி வந்தது. அந்த குறுஞ்செய்தியில் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதற்கு ஆசைப்பட்ட அந்த நபர் உடனே குறுஞ்செய்தியில் வந்த செல்போன் எண்ணை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டாா். அப்போது, ஒரு குறிப்பிட்ட செல்போன் ஆப்பில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று எதிர்முனையில் இருந்து பதில் வந்துள்ளது.
இதை நம்பி அவரும் பல தவணைகளாக ரூ.4 இலட்சத்து 83 ஆயிரத்தை அந்த ஆப்பில் முதலீடு செய்துள்ளார். ஆனால் அதன்பிறகு அந்த முதலீட்டு நிறுவனத்தில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் விசாரித்து பார்த்தபோது அந்த செல்போன் ஆப்பில் வந்த நிறுவனம் போலியானது என்றும், தான் ஏமாற்றப்பட்டதும் அவருக்கு தெரியவந்தது.
ஏ.டி.எம். கார்டை புதுப்பிப்பதாக...
இதே போல நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்த ஒருவரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர், தான் வங்கி மேலாளர் என்றும், உங்களது ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஏ.டி.எம். கார்டை புதுப்பித்து தருவதாக கூறி சம்பந்தப்பட்ட நபருக்கு ஒரு பார்கோடு அனுப்பி உள்ளார்.
இதை நம்பி அந்த பார்கோடை அவர் ஸ்கேன் செய்தார். அவ்வாறு ஸ்கேன் செய்த அடுத்த நொடியே அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.9 ஆயிரத்து 445 எடுக்கப்பட்டு விட்டது. இதனையடுத்து வங்கி மேலாளர் போல பேசி ஏமாற்றி பணத்தை மோசடி செய்தது சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியவந்தது.
இந்த சம்பங்கள் தொடர்பாக தனித்தனியாக பொலிஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
பொலிஸ் சூப்பிரண்டு அறிவுரை
இதுதொடர்பாக விசாரணை நடத்த சைபர் கிரைமுக்கு, பொலிஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுேபான்ற மோசடிகள் அடிக்கடி நடப்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படியும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
செல்போன் மூலம் மோசடிகள் அதிகரித்து வருவது குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago