2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வீட்டிலிருந்து வெளியேறினார்

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 01 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை :

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் சின்னப்பொண்ணு வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் சின்னப்பொண்ணு, இசைவாணி, பாவ்னி, ஸ்ருதி, பிரியங்கா, அபினய், வருண், இமான், அக்‌ஷரா என 9 பேர் பரிந்துரை  செய்யப்பட்டு இருந்தனர்.

இதில்   இமாம் மற்றும் இசைவாணி காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 29வது நாளன்று கமல் போட்டியாளர்களுடன் கலந்து கொண்டு பேசினார். இதில்,  7 போட்டியாளர்களை மட்டும் தனியாக வருமாறு அழைத்தார். வழக்கமாக அவ்வாறில்லை. இந்த முறை தனி அறையில் நடந்தது.

எல்லாரும் வீட்டின் நினைவு வந்து அழுவார்கள் ஆனால், சாப்பாட்டு நினைவு வந்து அழுத பிரியங்கா இந்த வாரம் 'சேஃப்' என்று கூறினார். இதையடுத்து அக்‌ஷரா மற்றும் ஸ்ருதி, பாவ்னி ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார்.

இறுதியில், வருண், அபினய் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் இருந்தனர். இதில், இந்த வீட்டுக்கு நீங்கள் எதற்காக வந்தீர்கள் என்பதை உணர வேண்டும். இந் தவீட்டில் உங்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். இதையடுத்து, சின்னப்பொண்ணு பெயர் கார்டை கமல் காட்டினார். இதையடுத்து, சின்னப்பொண்ணு எலிமினேட் செய்யப்பட்டார். கடைசி நேரத்தில் வருண் மற்றும் அபினய் இருவரும் காப்பாற்றப்பட்டனர்.

இதையடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற சின்னப்பொண்ணு, நான் யாரிடமாவது தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும் என்று கண்ணீர் மல்க கூறினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக காட்டுச்சிறுக்கி... காட்டுச்சிறுக்கி பாடலை உருக்கமுடன் பாடி வெளியேறினார்.

கமலிடம் பேசிய சின்னப்பொண்ணு, நாட்டுப்புற கலைஞர்களுக்கு இந்த வீட்டில் வாழ்வதற்கு சந்தர்ப்பம் கொடுத்ததற்கு நன்றி என்றார். இதையடுத்து பேசிய கமல், இந்த மேடை உங்களுக்கு கொடுத்திருக்கும் பலத்தில் நீங்கள் ஏறும் மேடை இன்னும் அலங்காரமாக இருக்கும் என்று வாழ்த்தினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .