2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

வீட்டோட மாப்பிள்ளையுடன் ஓட்டம் பிடித்த மாமியார்

Editorial   / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம், ராம்புர்கஹத் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண கோபால் தாஸ், இவர் பிரியங்கா தாஸ் என்ற பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கிருஷ்ணகோபால் தாஸ், அடிக்கடி பிரியங்கா தாஸிடம் சண்டையிடுவதும் , அடித்து துன்புறுத்துவதும் போன்ற செயல்களின் ஈடுபட்டு வந்துள்ளார்.இதனால் இவர்களின் பஞ்சாயத்து இரு குடும்பங்களிடையே பேசி தீர்க்கப்பட்டது.

கிருஷ்ண கோபால் தாஸ் வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அவரின் மனைவி வீட்டில் சிறிது காலம் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொல்லப்பட்டார் அதனால் வீட்டோடு மாப்பிள்ளையாக பிரியங்கா தாஸின் பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

வீட்டோடு மாப்பிளையாய் இருப்பதற்கு அவரும் பழகிக்கொண்டுவிட்டார் சொந்த வீடிற்கு செல்லலாம் என்று மனைவி கூப்பிட்டாலும் கிருஷ்ண கோபால் தாஸ் வராமல் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

கிருஷ்ண கோபால் தாஸ், தனது மனைவியின் தாய் (மாமியார்) ஷிபாலி தாஸ் என்பவரிடமே மறைமுகமாக தனது கள்ளக்காதலை தொடங்கியுள்ளார்.

பிரியங்கா தாஸ், வீட்டில் இல்லாத சமயத்தில் இருவரும் நெருங்கி பேசி பழகி வந்துள்ளனர். இந்த நெருக்கம் பிற்காலத்தில் காதலாக மாறியது. இந்த உறவு சுமார் 3 ஆண்டுகள் வரை சென்றுள்ளது.

இருவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பிரியங்கா தாஸ், இவர்கள் இருவருக்கு இடையே உள்ள உறவை  திடீரென ஒருநாள் கண்டுபிடித்துவிட்டார்.

இதனால் குடும்பத்தில் வாக்குவாதம் முற்றி கலவரமாக மாறியது. எனவே பிரியங்கா தாஸின் தாய் ஷிபானி தாஸ் தன் கள்ளகாதலனும் மருமகனுடன் வீட்டை விட்டு வெளியேறி தனியாக குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டார்.

மகளுக்கு துரோகம் செய்கிறோம் என்பதை தாண்டி கணவனை தவிக்க விட்டு சென்றுவிட்டார் ஷிபானி தாஸ்.

இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற  பிரியங்கா தாஸ், தன் கணவனை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்குமாறும் அவரின் தந்தையுடன் சேர்ந்து பொலிஸில் புகார் அளித்தார்.

 இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியாரே மருமகனை வீட்டை விட்டு வெளியேறி ஓடி குடும்பம் நடத்தி வந்த  சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலா பரவி வருகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .