2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’வீதிகளை வகுப்பறையாக மாற்றும் கொரோனா’

A.K.M. Ramzy   / 2021 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிருஷ்ணராயபுரம்

கரூர் மாவட்டம், மணவாசி அரசாங்கப் பாடசாலை  ஆசிரியர்கள், மாணவர்களைத் தேடிச் சென்று, வீதிகளை வகுப்பறையாக மாற்றி, பாடம் கற்றுக் கொடுக்கின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக, ஒன்றரை ஆண்டுகளாக பாடசாலைகள் திறக்கப்படாமல் உள்ளன. எனினும், தனியார் பாடசாலைகளில், 'ஒன்லைன்' வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசாங்க பாடசாலைகளில், ஒன்லைன் வகுப்பு நடத்தும் வசதிகள் இல்லாததால், மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டம், மணவாசி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பாடசாலை தலைமை ஆசிரியை தேன்மொழி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் வீடு தேடி சென்று, பாடம் நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக தலைமை ஆசிரியை தேன்மொழி கூறியதாவது:

'எங்கள் பாடசாலையில் எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரை, 179 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். கல்வி தொலைக் காட்சி, 'வட்ஸ் ஆப்' வாயிலாக பாடங்கள் கற்று தரப்பட்டன.

ஆயினும், மாணவ - மாணவியரின் கற்றல் திறனில் திருப்தி இல்லை. மற்ற ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தினேன். இதன்படி, விடுமுறை தவிர மற்ற நாட்களில் ஒவ்வொரு பகுதிக்கும், நான் உட்பட ஐந்து ஆசிரியர்கள் சென்று, மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகிறோம்.

பாடசாலைகளில் பாடம் எடுப்பதை போலவே, மாணவர்கள் அனைவரையும், அங்குள்ள கோவில், பொது இடங்களில் வரவழைத்து சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து, கைகளை சுத்தமாக கழுவி பாடம் நடத்தி வருகிறோம் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .