Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஜூலை 24 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மணிப்பூரில் கடந்த மே 4 ஆம் திகதி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி ஊர்வமலாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில், ஏற்கெனவே 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில், 5 ஆவதாக யும்லேம்பம் நுங்சிதோய் என்ற 19 வயது நபர் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 4 பேரை, காவல்துறையினர் 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த வன்கொடுமை செயலில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைதுசெய்யும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, பழங்குடியின பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து அம்மாநிலம் முழுவதும் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நோங்க்பாக் பகுதியைச் சேர்ந்த ஹீராதாஸ் வீட்டை அப்பகுதி பெண்கள் தீவைத்து எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட காங்க்புகி பகுதியைச் சேர்ந்த 2ஆவது நபரின் வீட்டையும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர்.
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago