2025 மே 09, வெள்ளிக்கிழமை

வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது ஆதித்யா எல்-1

Mithuna   / 2024 ஜனவரி 07 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் சம புவி ஈர்ப்பு விசையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

சூரியனை பூமி சுற்றும்போது, அதற்கு ஏற்ப சூரியனை ஆதித்யா விண்கலமும் பின்தொடரும். எல்-1 என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான ஒரு குறிப்பிட்ட புள்ளியை குறிக்கும் லாக்ரேஞ்ச் பாயிண்ட் என்ற இடமாகும். எல்-1 என்ற இடத்திலிருந்து எவ்வித குறிக்கீடும் இன்றி சூரியனை ஆராய முடியும்.

ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டெம்பர் 2-ந்திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு ஆய்வுப்பணிகளை ஆதித்யா மேற்கொள்ள உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X