2025 ஜூலை 16, புதன்கிழமை

“வெளிநாடுகளில் அது வேண்டாமே”

Freelancer   / 2023 நவம்பர் 27 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார்.

இந்நிலையில் இம்மாத கடைசி ஞாயிறு (26) மனதின் குரல் 107-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

“இந்தியர்கள சிலர் தங்களது திருமணங்களை வெளிநாடுகளில் வைக்கின்றனர். இது தேவைதானா? நமது நாட்டிலேயே திருமணத்தை வைத்துக்கொண்டால், இந்தியாவின் பணம் வெளியே எங்கும் செல்லாமல் நாட்டுக்குள்ளேயே இருக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்த அது உதவியாக இருக்கும்.

வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டுக்குள்ளே இந்தியர்கள் திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல், திருமணத்திற்காக பொருட்கள் வாங்கும் போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என ​மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X