2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வெள்ளத்தில் மூழ்கியது சென்னை

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 07 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை;

சென்னையில் நேற்றுக் காலை   மேக மூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது.  இரவு கனமழை பெய்தது. நள்ளிரவு அதி கனமழை பெய்ய ஆரம்பித்தது. இன்று காலையிலும் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்ததால் சாலைகள், தெருக்கள் வெள்ளத்தால் மூழ்கின.

இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளித்தன. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இந்த நிலையில் நேற்றிரவில் இருந்து இன்று காலை 12 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக 23 சென்றி மீட்டர் கனமழை கொட்டித் தீர்த்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக டி.ஜி.பி. அலுவலகப் பகுதியில் 23 சென்றி மீட்டர் மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கம் மற்றும் அம்பத்தூரில் 21 சென்றி மீட்டர், அயனாவரத்தில் 18 சென்றி மீட்டர், எம்.ஜி.ஆர். நகரில் 17 சென்றி மீட்டர், அண்ணாநகரில் 16 சென்றி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

20 சென்றி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்தால் அதி கனமழை எனக் கணக்கீடப்படும். அதன்படி சென்னையில் அதி கனமழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டுக்குப்பின் அதி கனமழை பெய்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .