2025 ஜூலை 31, வியாழக்கிழமை

வைத்தியசாலைகளில் பிரசவம் பார்க்க மறுப்பு; 877 சிசுக்கள், 61 கர்ப்பிணிகள் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 மார்ச் 22 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேகாலயா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான கர்ப்பிணிப் பெண்கள் மற்றும்  குழந்தைகளின் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேகாலயா தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் ” புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்புக்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டபோது ‘ சரியான மருத்துவ கவனிப்பு இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக்” கண்டறியப்பட்டது.

அத்துடன் ”கொரோனா நோய்த் தொற்று பரவலால் ஏற்பட்ட பயம் காரணமாக தங்களை மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுத்துவிட்டனர் எனவும், கொரோனா பரிசோதனை செய்ய மறுத்துவிட்டனர் எனவும் கர்ப்பிணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் சுமார் 877 சிசுக்கள் மற்றும்  61 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர்” இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.



 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .