2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

வைரலாகும் ‘தோசை மேன்’

Ilango Bharathy   / 2022 மார்ச் 06 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சைக்கிளில் 100 வகையான தோசைகளை விற்று வரும் “தோசை மேன்” என்பவரின் வீடியோவானது  இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மும்பையைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவரே கடந்த 27 வருடங்களாக இவ்வாறு  தனது சைக்கிளில் 100க்கும் மேற்பட்ட தோசைகளைத்  தயாரித்து வீதி, வீதியாக விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர் சைக்கிளில் தோசை தாயாரிக்கும் வீடியோவொன்று அண்மையில்  இணையத்தில் வெளியாகி  வைரலானதையடுத்து, அவரது கடைக்கு உணவுப் பிரியர்கள் படையெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவரது விற்பனையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .