2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

வைரலாகும் மேக்ஸ்வெலின் திருமண பத்திரிக்கை

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 13 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell )தமிழகத்தைச் சேர்ந்த ‘வினி ராமனை ‘ திருமணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேக்ஸ்வெல் கடந்த முறை ஐபிஎல்லில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிமைக்காக  இம் முறையும், ஐபிஎல் ஏல போட்டியில்  குறித்த அணி இவரை  இந்திய மதிப்பில்  11 கோடி ரூபாவுக்கு ஏலம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர்  தனது காதலியும், அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் தமிழகத்தின் மேற்று மாம்பலத்தைச் சேர்ந்த  வினி ராமன் என்பவரை  வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி திருமணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

 இந்நிலையில் தமிழ் மொழியில் அச்சிடப்பட்டுள்ள  இவர்களது திருமண பத்திரிக்கையானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X