2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஸ்மார்ட் போனுக்காக மனைவியை விற்ற சிறுவன்

Freelancer   / 2021 ஒக்டோபர் 23 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒடிசா மாநிலம் ராய்ப்பூர் பாலங்கீரியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு கடந்த ஜூலை மாதம் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

குறித்த தம்பதியினர், ராய்பூர் மற்றும் ஜான்சி வழியாக ஓகஸ்ட் மாதம் ராஜஸ்தானுக்கு செங்கல் சூளை வேலைக்குச் சென்றனர். 

அங்கு  சென்ற சில நாட்களில், பரன் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது முதியவருக்கு தனது மனைவியை 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு அந்த 17 வயது சிறுவன் விற்பனை செய்துள்ளார்.  

மனைவியை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்ததுடன், ஸ்மார்ட் போன் ஒன்றையும்  வாங்கியுள்ளார். 

பின்னர், தனது சொந்த ஊருக்கு திரும்பிய சிறுவனிடம்  மனைவி எங்கே என குடும்பத்தினர் கேட்டபோது, அவர்   தன்னை விட்டு விட்டு  ஓடி விட்டதாக கூறியுள்ளார். 

இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் குடும்பத்தினர், பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

அதன்பின்னர், பொலிஸார் நடத்திய விசாரணையின் போதே அவர் மனைவியை விற்றமை தெரியவந்துள்ளது. 

பாலங்கீரிலிருந்து ராஜஸ்தானுக்கு அந்த சிறுமியை  கண்டுபிடிக்க பொலிஸ்  குழு அனுப்பப்பட்டதுடன்,  சிறுமியை மீட்க குழுவுக்கு நிறைய சிரமங்கள் ஏற்பட்டன.  

ஏனெனில் பணம் கொடுத்த காரணத்தினால் சிறுமியை பொலிஸ் குழுவினர் அழைத்துச் செல்ல உள்ளூர் கிராமவாசிகள் அனுமதிக்கவில்லை. 

ஒரு வழியாக  பொலிஸார் சிறுமியை மீட்டதுடன், 17 வயதான சிறுவன், சிறார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு  அனுப்பப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .