Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 15 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்நாடகாவிலுள்ள உடுப்பி அரசு மகளிர் பல்கலைக்கழகத்தில், அண்மையில் ஆறு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருகை தந்ததால் அம்மாணவிகளை அப் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியேற்றியது.
இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே கல்லூரி நிர்வாகத்தைக் எதிர்த்து மாணவியர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய தினம் (15) இவ் வழக்கின் தீர்ப்பை கர்நாடக நீதிமன்றம் வெளியிட்டது.
அந்தவகையில் "ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அவசியமானது இல்லை எனவும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லுபடியாகும்" எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து மாணவிகள் அளித்த இருந்த மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இத்தீர்ப்பினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அம்மாநிலம் முழுவதும் பொலிஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago