2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

ஹோட்டல் அறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகொலை

Freelancer   / 2025 ஜனவரி 01 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரபிரதேச மாநிலம், லக்னோ -  நாகா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் அறையில், இன்று (1)  அதிகாலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

 இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்,  அர்ஷத் (வயது 24) என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக, தனது சொந்த குடும்பத்தை சேர்ந்த 5 பேரை சந்தேகநபர் கொன்றதாக  விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அலியா (9), அல்ஷியா (19), அக்சா (16) மற்றும் ரஹ்மீன் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

உயிரிழந்த அனைவரும் அர்ஷத்தின் சகோதரிகள் என்றும் ஐந்தாவது நபரான அஸ்மா என்பவர் அர்ஷத்தின் தாயார் என்றும், பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், தடயவியல் குழுக்கள் குற்றம் நடந்த இடத்தில் சாட்சியங்களை சேகரிக்க நிறுத்தப்பட்டுள்ளன என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர். 



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X