2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பலன்கள் (03.01.2011)

A.P.Mathan   / 2011 ஜனவரி 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (03.01.2011)

மேடம்
தொலைந்த பொருள் கிடைத்தல், இறைவழிபாடுகளில் அதிக நாட்டம் காட்டுதல், பிறரின் பிரச்சினைகளினால் மனஸ்தாபம்.
அஸ்வினி: சிக்கல்
பரணி: நலம்
கிருத்திகை 1ஆம் பாதம்: தியானங்கள்


இடபம்
குடும்ப சுபவிஷேங்களினால் உறவினர்களின் வருகை, நாவுக்கு சுவையான உணவுகள் உண்ணலாம், புதிய தகவல் உரிய நேரத்தில் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: ஆகாரம்
ரோகிணி: நற்செய்தி
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி


மிதுனம்
தொழில் முயற்சிகள் பின்தள்ளப்படும், தேவையற்ற பேச்சுக்களினால் மனஸ்தாபம் ஏற்படும், உணவில் விருப்பமின்மை ஏற்படுதல்.
மிருகசீரிடம் 2, 3: வெறுப்பு
திருவாதிரை: நஷ்டம்
புனர்பூசம்: வாக்குவாதம்


கடகம்
பணப்பிரச்சினைகளால் அலைச்சல்கள் ஏற்படும், நீண்ட தேசங்களிருந்து செய்தி கிடைக்கும், உடல் நலன் பாதிப்படைதல்.
புனர்பூசம்: தகவல்
பூசம்: சிரமம்
ஆயில்யம்: நோய்கள்



சிம்மம்
அழகிய ஆச்சரிய பொருள் காணல், பெண்களுடன் பொறுமையுடன் செயல்படவும், மனகுழப்பங்கள் ஏற்படுதல்.
மகம்: துன்பம்
பூரம்: நிதானம்
உத்திரம் 1ஆம் பாதம்: விசித்திரம்  


கன்னி  
நெருங்கிய நண்பர்களின் சந்திப்புக்கள் கிடைக்கும், வியாபாரத்தில் புதிய தொடர்புகள் லாபகரமான இருக்கும், தனலாபம் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: முன்னேற்றம்
அஸ்தம்: நட்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: வரவு


துலாம்
ஒவ்வாத உபாதைகள் வந்து நீங்கும், புதிய காரியங்கள் காலதாமதத்தை ஏற்படுத்தல், பகைவர்களின் சகவாசங்கள் கவலை தரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நலன் கேடு
சுவாதி: துன்பம்
விசாகம் 1, 2, 3: தாமதம்


விருட்சிகம்
கடின முயற்சியுடன் செயல்படுவது அவசியம், தூரதேசத்திலிருந்து செய்திகள் வருதல், பிறரின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும்.
விசாகம் 4: உழைப்பு
அனுசம்: உதவி
கேட்டை: நற்செய்தி


தனுசு
நன்மையான காரியங்களில் ஈடுபடுதல், காணாமல்போன பொருள் கிடைத்தல், தீயவர்களின் செயல்கள் மனகஷ்டத்தை ஏற்படுத்தும்.
மூலம்: கவலை
பூராடம்: புண்ணிய செயல்
உத்திராடம் 1ஆம் பாதம்: சுபம்


மகரம்
தொழிலில் நவீன தொடர்புகளை மேம்படுத்தல், குடும்பத்தில் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும், நட்பு வட்டம் விரிவடைதல்.
உத்திராடம் 2, 3, 4: அனுகூலம்
திருவோணம்: ஒற்றுமை
அவிட்டம் 1, 2: வாய்ப்பு


கும்பம்
பகைவர்களுடன் அதிக பேச்சுகளை தவிர்க்கவும், திட்டமிட்ட செயல்களில் தடைகள் ஏற்படுதல், சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படும்.
அவிட்டம் 3, 4: சுகயீனம்
சதயம்: சகிப்பு
பூரட்டாதி 1, 2, 3: விவாதம்



மீனம்
பணம் சம்பாதிப்பதில் கடின உழைப்பு தேவை, பிறரின் மூலம் உதவி கிடைக்கும், மனதால் அலைச்சல்கள் ஏற்படுதல்.  
பூரட்டாதி 4: சலுகை
உத்திரட்டாதி: ஊக்கம்
ரேவதி: குழப்பம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .