2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பள்ளத்தில் பஸ் உருண்டுச் சென்றதால் 35 பேர் பலி

Editorial   / 2019 ஜூலை 01 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிஷ்த்வார் மாவட்டம் கேஷ்வானில் இருந்து கிஷ்த்வார் நோக்கி இன்று (01) காலை சென்றுகொண்டிருந்த பஸ்ஸொன்று, மலைப்பகுதியொன்றின் அடிவாரத்தில் உருண்டு சென்றதில், 35 பேர் பலியாகியுள்ளனர்.

கிஷ்த்வாரை பகுதியில் வைத்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தபோதே, குறித்த பஸ் பள்ளத்தில் உருண்டுச் சென்றதாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்றதையடுத்து, பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் பிரதேச மக்களும் இணைந்து, முதலில் 10 பேரின் சடலத்தையே மீட்டிருந்தனர். பின்னர், நேற்று பிற்பகல் நிலவரப்படி, மொத்தமாக 35 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

17 பேர், கடுயைமான காயங்களுடன், அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கிஷ்த்வார் விபத்து இதயத்தை பிழியும் வகையில் அமைந்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக, பிரதமர் மோடி, தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று, ஜம்மு காஷ்மர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .