2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

1,700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை

Mayu   / 2024 பெப்ரவரி 14 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் பெர்ரிஃபீல்ட்ஸ் பகுதியில் 1,700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முட்டையை ஆய்வு செய்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, சேதமடையாத முட்டையின் மஞ்சள் கருவும் வெள்ளை கருவும் இன்னும் இயற்கையாக முட்டையில் பாதுகாக்கப்படுவதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.

ஆக்ஸ்போர்டைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எட்வர்ட் பிடுல்ஃப்  இது குறித்து தெரிவிக்கையில், 1,700 ஆண்டுகளுக்குப் பிறகும் மனித தலையீடு இல்லாமல் இயற்கையாகவே மஞ்சள் கருவும் வெள்ளையும் பாதுகாக்கப்பட்ட உலகின் ஒரே முட்டை இது என்று தான் நம்புவதாகக் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .