2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

1 ஆம் இடத்தில் ஐஸ்லாந்து

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 18 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021-ஆம் ஆண்டில் உலகின் மிகப் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது .

ஒவ்வொரு வருடமும் உலகின் பாதுகாப்பு மிக்க நாடுகளின் பட்டியலை மதிப்பெண்களின் அடிப்படையில் Global Peace Index நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வாண்டுக்கான பட்டியலானது அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

 163 நாடுகள் இடம் பெற்றுள்ள இப்பட்டியலில் முதல் 1ஆவது இடத்தில் ஐஸ்லாந்தும், 2ஆவது இடத்தில் டென்மார்க்கும்  3ஆவது இடத்தில் நியூசிலாந்தும் இடம் பிடித்துள்ளன.

இதனைத்தொடர்ந்து நோர்வே, ஒஸ்திரியா , ஸ்லோவேனியா, ஜப்பான்,கத்தார், பின்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா  ஆகிய நாடுகள் முதல் 10 நாடுகளுக்குள் அடங்குகின்றன.

இப்பட்டியலில் இலங்கை 145ஆவது இடத்தையும் ,   இந்தியா 144 ஆவது இடத்தையும்  ஆப்கானிஸ்தான் 163 ஆவது இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .