2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

1 லட்சம் அரச ஊழியர்கள் பணி நீக்கம்; அதிர்ச்சியில் மக்கள்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 16 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் புதிய பிரதமரான  லிஸ் ட்ரஸ் (Liz Truss)  நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டிடியூட் பார் பிஸ்கல் ஸ்டடீஸ்( Institute for Fiscal Studies ) என்ற பிரித்தானியாவின் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம்,பிரித்தானியா  கடனிலிருந்து மீள்வதற்கு அரச ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யுமாறு ஆலோசனை கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் மாத்திரம்  ஒரு லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிற பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாது எனவும் அடுத்த வருடத்திலும் பணவீக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் பணியாளர்கள் ஒரு லட்சம் பேரைப் பணிநீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X