2025 மே 15, வியாழக்கிழமை

10 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம் கணவனுடன் 50 பேர் கைது

Freelancer   / 2023 ஜூன் 26 , மு.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனைவிக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து அவருக்கே தெரியாமல், 10 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கணவனின் செயல், பிரான்ஸை அதிரச் செய்துள்ளது. இது தொடர்பாக 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பிரான்ஸ் நாட்டின் தெற்கில் உள்ள பகுதி, அவிக்னான். இங்கு வசித்து வரும் டொமினிக் என்பவர், தற்போது 50 வயதாகும் தன் மனைவிக்கே தெரியாமல், இரவு உணவில் மயக்க மருந்தைக் கொடுத்து, அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.  

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு நபர்கள் தன் மனைவியை 90-க்கும் மேற்பட்ட முறை பலாத்காரம் செய்ய அனுமதித்துள்ளார். அத்துடன் நிற்காமல், அதனை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார். 

இந்தக் குற்றச் செயலில், 83 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் 26 வயது முதல் 73 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில் நகராட்சி கவுன்சிலர், வங்கி ஊழியர், சிறைக்காவலர், செவிலியர், ஊடகவியலாளர், லாரி ஓட்டுநர் உள்ளிட்டோரும் அடங்குவர்.

தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இந்தக் குற்ற நிகழ்வு வெளியே தெரியாமல் இருக்க, டொமினிக், சில நிபந்தனைகளை விதித்து ஆண்களை அனுமதித்துள்ளார். அதன்படி, வாடிக்கையாளர்கள் புகையிலை பயன்படுத்தக்கூடாது; வாசனை திரவியங்களை உடலில் பூசியிருக்கக் கூடாது. குளியலறையில் ஆடைகளை களைந்துவிட்டு வெந்நீரில் கால்களை கழுவிய பிறகே மனைவியின் அறைக்குச் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இருந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .