2026 மார்ச் 26, வியாழக்கிழமை

1000 நாய்களைக் கொலை செய்த நபர்;தென்கொரியாவில் பரபரப்பு

Ilango Bharathy   / 2023 மார்ச் 12 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்கொரியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களை நபர் ஒருவர்  பட்டினி போட்டுக்  கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில்  ஜோங்ஜி மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், தனது வளர்ப்பு நாயைக் காணவில்லை எனப் பொலிஸாரிடம் புகாரளித்துள்ளார்.

இப்புகாரினையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் , அதே பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபரின் வீட்டில் குவியல் குவியலாக நாய்களின் சடலங்கள் இருப்பதை கண்டுபொலிஸார்  அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து பொலிஸாரின் விசாரணையில்” குறித்த நபர் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களை எடுத்துவந்து உணவளிக்காமல் கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

 மேலும் இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் நாய்கள், கருத்தரிக்க முடியாத வயதை அடையும்போது, பண்ணை உரிமையாளர்கள் அவற்றைக்  கொலை செய்யும் பொறுப்பை அந்த நபரிடம் ஒப்படைத்ததாகவும், அதற்காக ஒரு நாய்க்கு 800 ரூபாய் வீதம் கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .