Freelancer / 2023 மே 10 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 113 பேர் இலங்கையில் தாங்கள் அனுபவித்த பாலியல் வன்கொடுமைகள், கொள்ளைகள், திருட்டுகள், தாக்குதல்கள் மற்றும் மோசடிகள் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தென் மாகாணத்தில் இந்த அனுபவங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதில், 65 புகார்கள் திருட்டு மற்றும் கொள்ளை தொடர்பானவை. அவர்களில் 20 பேர் ஐரோப்பிய குடிமக்கள். மேலும் 21 பேர் ரஷ்யர்கள். இதேவேளை, 6 அமெரிக்கர்களும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த 4 மாதங்களில் 13 வெளிநாட்டு பெண்கள் இலங்கையர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 9 பேர் ஐரோப்பிய பெண்கள். ஜப்பானிய சிறுமி ஒருவர் உட்பட 2 ரஷ்ய சிறுமிகளும் இதில் அடங்குவர்.
மேலும் 13 வெளிநாட்டவர்கள் தாக்குதல்கள், காயங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து புகார் அளித்துள்ளனர்.
பயணங்களின் போது மோசடிகள் மற்றும் பல்வேறு கொள்ளைகள் தொடர்பாக 20க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. R
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago