2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

14வது ஆண்டை எட்டியது குவெட்டாவில் பலூச் போராட்டம்

Editorial   / 2023 ஜூன் 01 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலூச் மாணவர் குழுக்கள் மற்றும் பல உரிமைகள் குழுக்கள் மற்றும் தனிநபர்கள்  குவெட்டா பிரஸ் கிளப்பின் வெளியே இராணுவம் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களின் ஊடாக பலூச் ஆர்வலர்கள் தொடர்ந்து காணாமல் போவதை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

இது பலூச் ஆர்வலர்கள் நடத்திய போராட்டத்தின் 14 ஆவது ஆண்டாகும், இது பாகிஸ்தானில்  குழுவொன்று நடத்திய மிக நீண்ட எதிர்ப்பு ஆகும்.

பேரணிக்கு பிரபல பலூச் ஆர்வலர் மாமா கதீர் பலூச் தலைமை தாங்கினார். 2012 ஆம் ஆண்டில், அவரது சொந்த மகன் ஜலீல் ரெக்கி பலோச் மர்மமான  நிலையில் இறந்தார். அவர் தனது மகன் இராணுவத்தால் கொல்லப்பட்டதாக நம்பினார். அவர் பலூச் காணாமல் போனவர்களுக்கான குரல் அமைப்பின் தலைவராக உள்ளார். 2009ல் போராட்டத்தை தொடங்கினார்.

பலூச் ஆர்வலர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டு வெவ்வேறு பாதுகாப்பு நிறுவனங்களால் சுமார் 181 பேர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பலூச்சின் எண்ணிக்கை இந்த ஆண்டு 150ஐத் தாண்டியுள்ளது. பலூச்சின் குரலை அடக்குவதில் அரசு எவ்வளவு இடையறாது இருந்தது என்பதை மாதப் புள்ளிவிவரம் காட்டுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரலில், 31 பலூச் ஆண்களும் பெண்களும் காணாமல் போயிருந்தனர் மற்றும் 50 பேர் இறந்து கிடந்தனர். மார்ச் மாதத்தில், 52 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 56 பேர் இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். பெப்ரவரியில், 42 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 52 பேர் காணாமல் போயினர். ஜனவரி மாதம் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 42 பேர் காணாமல் போயினர் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .