2026 மார்ச் 23, திங்கட்கிழமை

19 மாணவர்களைப் பலியெடுத்த பாடசாலை

Ilango Bharathy   / 2023 மே 23 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கயானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான கயானாவின் மஹ்தியா பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைவிடுதியிலேயே நேற்று முன்தினம்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் 12 முதல் 18 வயது வரையிலான 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .