2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

2022 ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்க பரிசீலனை

Editorial   / 2021 ஜூலை 30 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் நடைபெறவிருக்கும்  2022ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்க மனித உரிமைகள், இராஜதந்திரிகள் பரிசீலனைசெய்து வருகின்றனர் என பொக்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

“உத்தியோகபூர்வ தூதுக்குழுவொன்றை சீனாவுக்கு அனுப்புவதில் அமெரிக்காவுக்கு தாக்கம் ஏற்படலாம்” என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் வால்ட்ஸ் கருத்து வெளியிட்டார். அதனையடுத்தே மேற்கண்டவாறு பரி​சீலனை செய்யப்படுவதாக அறியமுடிகின்றது.

இந்த நிர்வாகமும் முன்னைய நிர்வாகமும் இந்த விடயத்தில் உத்தியோகபூர்வமாகவும், உத்தியோகபூர்வமற்றும் ஒரே விடயத்தை அதாவது, சீனாவில் மனிதப்படுகொலை நடக்கிறது என்று தெரிவித்துள்ளன என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அங்கு ஒரு தூதுக்குழுவை அனுப்புவதுபற்றி கற்பனை செய்து பார்க்கமுடியாது” என்றும் வால்ட்ஸ் கூறியுள்ளார்.

இந்த விளையாட்டுக்களை சீனா-பீஜிங்கில் நடத்துவதிலிருந்து இரண்டு வருடங்களுக்கு தள்ளிவைக்குமாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் கோருகிறோம் எனத் தெரிவித்துள்ள அவர், அங்கு இனப்படுகொலை நடக்கும்போது   எங்கள் நாட்டுக்கொடியை எவ்வாறு அங்கு பறக்கவிடமுடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பினார் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .