2025 மே 14, புதன்கிழமை

2023ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 03 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல் நினைவாக, ஆண்டுத்தோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளின் கீழ் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2023ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த கேட்டலின் கரிக்கோ மற்றும் வீய்ஸ்மேனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நியூக்ளியோசைடு  மூலக்கூறுகள் மாற்றம்  தொடர்பாக இவர்களின் கண்டுபிடிப்பு கொரோனா நோய்த் தொற்றின் போது, எம்ஆர்என்ஏ தடுப்பூசி தயாரிக்கப்பட்ட காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றுவதற்கு காரணமாக அமைந்த விஞ்ஞானிகள் தற்போது நோபல் பரிசு மூலம் கௌவுரவிக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டு நோபல் பரிசு தொகை 8 கோடியாக அதிகரிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .