2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

24 மணி நேரம் கெடு விதித்தார் ட்ரம்ப்

S.Renuka   / 2025 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரியை கணிசமாக உயர்த்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய ட்ரம்ப், “இந்தியா ஒரு நல்ல வர்த்தக கூட்டாளியாக இல்லை, ஏனென்றால் அவர்கள் எங்களுடன் நிறைய வணிகம் செய்கிறார்கள்.

ஆனால், நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்வதில்லை. எனவே, நாங்கள் 25 சதவீத வரி விதிக்க முடிவு செய்தோம். ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் நான் அதை கணிசமாக உயர்த்தப் போகிறேன் என்று நினைக்கிறேன், காரணம், அவர்கள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறார்கள். உக்ரைன் மீதான தாக்குதலுக்கான எரிபொருளை அவர்கள் ஊக்குவிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 30 அன்று, டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்தார். மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். ரஷ்யா உக்ரைனுடன் சமாதான ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும் நாடுகளுக்கு 100% வரை கூடுதல் வரிகளை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (05) தனது சமூக வலைதள பக்கத்தில், “இந்தியா ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெயில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு விற்கிறது. ரஷ்ய போர் இயந்திரத்தால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது பற்றி அவர்களுக்கு கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்” என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த அச்சுறுத்தலுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .