2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

3 சுயேட்சைகள் நவாஸூக்கு ஆதரவு

Mithuna   / 2024 பெப்ரவரி 12 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் கடந்த 8-ந் திகதி பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியபோதும் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதுஅரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்கும், போராட்டத்துக்கும் வழிவகுத்தது.

அதன் எதிரெலியாக தேர்தல் ஆணையம் முடிவுகளை வேகமாக அறிவிக்க தொடங்கியது. இருந்தபோதிலும் வாக்கு எண்ணிக்கை 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

255 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னாள் பிரதமா் இம்ரான்கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீப்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள் 101 இடங்களை பெற்று முதலிடத்தில் உள்ளனர்.

 அதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 73 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 27 இடங்களில் பிற சிறிய கட்சிகள் வெற்றிப் பெற்றன.

ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவை என்கிற நிலையில் தற்போதைய சூழலில் எந்த கட்சியும் அதற்கான பெரும்பான்மையை பெறவில்லை. இதனால் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யாா் என்பதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X