2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

30 நிமிடங்களுக்குள் நடந்து முடிந்த தேர்தல்

Ilango Bharathy   / 2023 மே 30 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

30 நிமிடங்களுக்குள் உள்ளாட்சி மேயர் தேர்தலொன்று நடந்து முடிந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினில் உள்ள வில்லரோயா என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்களே கடந்த  ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெறும் 29.52 வினாடிகளில்  வாக்களித்து  இப்புதிய சாதனையைப்  படைத்துள்ளனர்.

இத் தேர்தலின்  மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7 ஆகும். தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வியைத் தாண்டி வாக்களிக்கும் நடவடிக்கைகளை வேகமாகவும், எளிதாகவும் நடத்தி முடிப்பதே தேர்தலின் முக்கியக் குறிக்கோளாக இருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.  

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 8 வாக்காளர்கள் சுமார் 32.25 நிமிடத்தில் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக் கிராமத்தின் தற்போதைய மேயரான சால்வடார் பெரெஸ்  1973 இல் தொடங்கி 50 வருடங்களாக தொடர்ந்து அப்பொறுப்பில் இருந்து வருகிறார். வாக்குப்பதிவுக்கு  பின்பு பேசிய அவர்,  "ஏழு வாக்காளர்களின் முழு ஆதரவு எனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால், நான் இம்முறையும் வெற்றி பெறுவேன்" எனத்  தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .