2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

32ஆவது உறுப்பு நாடாக நேட்டோவில் இணைந்த சுவீடன்!

Freelancer   / 2024 மார்ச் 08 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவீடன், நேட்டோவின் உறுப்பு நாடுகள் பட்டியலில், 32ஆவது நாடாக அதிகாரபூர்வமாக இணைந்துள்ளது.

நேட்டோ என அழைக்கப்படும் வட அட்லாண்டிய ஒப்பந்த கூட்டமைப்பானது, மேற்கத்திய நாடுகளின் இராணுவக் கூட்டமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

இது ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளின் கூட்டணியாக கருதப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பு உருவானபோதே கிழக்கை நோக்கி (அன்றைய சோவியத் யூனியன் தற்போது ரஷ்யா) இது விரிவுப்படுத்தப்பட மாட்டாது என்று சோவியத் யூனியனிடம் நேட்டோ நாடுகள் உறுதியளித்தன.

ஆனால் சோவியத் யூனியன் உடைந்த பின்னர், அந்த வாக்குறுதியை மீறி ரஷ்யாவுக்கு அருகே இருந்த 10-க்கும் மேற்பட்ட நாடுகளை தன்னுடன் நேட்டோ இணைத்துக் கொண்டது.

நேட்டோவின் கொள்கையின் படி, உறுப்பு நாடுகள் மேல் வேறொரு நாடு தாக்குதல் நடத்துவது என்பது, தங்களின் மேல் நடத்தப்பட்ட தாக்குதலாகவே நேட்டோ நாடுகள் எடுத்துக்கொள்ளும். தாக்குதலுக்கு உள்ளான நாட்டைக் காக்க நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் ஓரணியில் இணைய வேண்டும்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து சுவீடனும், துருக்கியும் நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்காக பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தின. ரஷ்யா இருநாடுகளையும் எச்சரித்தது. ஆனாலும், கடந்த ஆண்டு ஏப்ரம் மாதம் ஃபின்லாந்து நேட்டோ கூட்டமைப்பில் இணைந்தது. 75 ஆண்டுகால இராணுவ அணிசேரா கொள்கையில் இருந்த ஃபின்லாந்து நேட்டோவில் இணைந்தது உலக அளவில் வியப்பினை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அட்லாண்டிக் இராணுவ கூட்டணியான நேட்டோவில் 32ஆவது நாடாக சுவீடன் இணைந்துள்ளது. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக சுவீடன் இராணுவ நிலைப்பாட்டைத் தவிர்த்து போர்க்காலங்களில் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துவந்த நிலையில், தற்போதைய நகர்வு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இது புவியியல் ரீதியாக ரஷ்யாவிற்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. ஏனெனில் சுவீடன் ரஷ்யாவுடன் 1340 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X