Editorial / 2019 மே 06 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெற்று முடிந்த 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் வரவிருக்கின்ற நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், அ.தி.மு.க வெற்றி பெறுமென தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தச் சட்டமன்ற இடைத்தேர்தல்ககள் தொடர்பில், திராவிட முன்னேற்ற கழகத்துக்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, நேற்று (05) சேலத்தில் கருத்துத் தெரிவித்த அவர்,
அ.தி.மு.க.வை பிளவுப்படுத்துவதற்கு, தி.மு.க தலைவர் முனைகின்றமை தற்போது அம்பலமாகியுள்ளது என்றும் மேலும் 22 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெறுவோமெனக் கூறி வரும் தி.மு.கவினர் எதற்காக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
ஆனாலும், உண்மையாக இவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டமையால்தான், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முனைவதாகவே எண்ணத் தோன்றுகிறது என்றும் 22 சட்டமன்ற தேர்தல்களிலும் அ.தி.மு.க.வே நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago