Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜூன் 02 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
1990-2000 காலகட்டத்தில் தொடர்ச்சியாக இளம்பெண்கள் பலர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் கனடாவின் வான்கூவர் நகரிலேயே இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் போர்ட் கோக்விட்லாம் பகுதியில் பன்றி பண்ணை நடத்திய ராபர்ட் பிக்டன் (வயது 71) சட்ட விரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக பொலிஸூக்கு புகார்கள் சென்றன.
இது குறித்து விசாரணை நடத்துவதற்காக சென்றபோது அவரது வீட்டில் உள்ள பிரிட்ஜில் ஒரு பெண்ணின் உடல் துண்டு, துண்டாக வெட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது 49 பெண்களை அவர் வெட்டிக்கொன்றதும், பின்னர் அவர்களது உடலை துண்டு, துண்டாக வெட்டி தனது பண்ணையில் உள்ள பன்றிகளுக்கு இரையாக போட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதுதொடர்பான வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதனையடுத்து அவர் வான்கூவரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் ராபர்ட்டுக்கும், சிறையில் உள்ள சக கைதிகளுக்கும் இடையே கடந்த மாதம் 19-ந் திகதி மோதல் ஏற்பட்டது. அப்போது கைதிகள் பலர் அவரை சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago