Editorial / 2019 ஏப்ரல் 30 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு, 9 மாநிலங்களிலுள்ள 72 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், நேற்று (29) நடைபெற்றது.
மகாராஷ்ராவில் 17 தொகுதிகளிலும் உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 13 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தின் 8 தொகுதிகளிலும் மத்திய பிரதேசம், ஒடிசாவில் தலா 6 தொகுதிகளிலும், பீகாரில் 5 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஜார்கண்ட் மாநிலத்தின் 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றதோடு, காஷ்மிரின் அனந்த்நாக் தொகுதியின் ஒரு பகுதிக்கானத் தேர்தல், 3ஆம் கட்ட வாக்குப்பதிவோடு நடைபெற்ற நிலையில், மற்றொரு பகுதிக்கான வாக்குப்பதிவு, 4ஆம் கட்டத் தேர்தலோடு, நேற்று நடைபெற்றது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகியது. இதில் ஆம் கட்ட வாக்குப்பதிவின் போது, மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago