2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

650 சிறுவர்களின் உடைகளை நீக்கி சோதனை; பொலிஸார் மீது பரபரப்பு புகார்

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில்கடந்த மூன்று வருடங்களில் சுமார் 650 சிறுவர்களின் ஆடைகளை நீக்கி பொலிஸார்  சோதனை மேற்கொண்டதாக  ரேச்சல் டி சோசா என்ற குழந்தைகள் நல ஆணையர் புகார் தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” கடந்த வருடம் கறுப்பினத்தை சேர்ந்த 15 வயதுடைய ஒரு சிறுமியிடம் கஞ்சா இருந்ததாக கூறி பெண் அதிகாரிகள் சோதித்தனர்.

அவர்கள் சிறுமிகளின் ஆடைகளை நீக்கி நிர்வாணமாகச்  சோதனை செய்தார்கள். அந்த சமயத்தில், சிறுமிக்கு மாதவிடாய் இருந்தது. எனினும் பெண் காவல்துறையினர் அவரிடம்  மரியாதையாக நடக்கவில்லை. 

அத்துடன் நாட்டில் தற்போது துப்பாக்கிசூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக சோதனை என்னும் பெயரில் இவ்வாறான சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் வருடத்திலிருந்து 2020 ஆம் வருடம் வரை சுமார் 650 சிறுவர்களின் உடைகளை நீக்கி சோதனைகள் நடைபெற்றுள்ளது. 

எனவே, சிறுமிகளை மதிப்புடன் நடத்த வேண்டும். இது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு சட்ட வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் ”என ரேச்சல் டி சோசா குறிப்பிட்டிருக்கிறார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X