2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

8 பேரை சுட்டுக்கொன்றது ஹமாஸ்

Freelancer   / 2025 ஒக்டோபர் 16 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்​ரேல்​-​காசா அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தான நிலை​யில் ஹமாஸ் குழு​வினர் நேற்று 8 பேரை சுட்​டுக்​கொன்​றுள்​ளனர்.

ஹமாஸ் குழு​வினர் ஆயுதங்​களை துறந்து காசா பகு​தியி​லிருந்து வெளி​யேற வேண்​டும், காசா பகு​தியை நிர்​வகிக்க சர்​வ​தேச அளவி​லான ஒரு குழு உரு​வாக்​கப்​படும் என்பன உள்​ளிட்ட 20 அம்​சங்​கள் அந்த ஒப்​பந்​தத்​தில் இடம்​பெற்​றுள்​ளன. ஆனால், காசா பகு​தியை விட்டு வெளி​யேறு​வது உள்​ளிட்ட சில அம்​சங்​களை ஹமாஸ் ஏற்​க​வில்​லை.

எகிப்​தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்​றும் எகிப்து ஜனாதிபதி அல் சிசி தலை​மை​யில் நடை​பெற்ற காசா அமைதி உச்சி மாநாட்​டில் அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இந்​நிலை​யில், ஒப்​பந்​தப்​படி இஸ்​ரேல் படை​யினர் வெளி​யேறியதும் காசா பகு​தியை ஹமாஸ் குழு​வினர் தங்​கள் கட்​டுப்​பாட்​டில் கொண்​டு​வந்​தனர். வீதியில் அவர்​கள் ரோந்து பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். 

இதனிடையே, காசா பகு​தியை கட்​டுக்​குள் கொண்​டு​வரு​வது தொடர்​பாக ஆயுதம் ஏந்​திய பாலஸ்​தீனக் குழுக்​களுக்​கும் ஹமாஸ் குழுக்​களுக்​கும் இடையே நேற்று மோதல் ஏற்​பட்​டது. இது தொடர்​பான காணொளி காட்​சிகள் சமூக ஊடகங்​களில் பகிரப்​பட்டு வரு​கிறது. அதில், கண்​கள் கட்​டப்​பட்ட நிலை​யில் 8 பேர் வீதி​யில் மண்​டி​யிட்​டிருக்க, ஹமாஸ் குழு​வினர் அவர்​களை துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொலை செய்​கின்​றனர். அப்​போது ஹமாஸ் குழு​வினர், “அல்​லாஹு அக்​பர், இவர்​கள் குற்​ற​வாளி​கள், இஸ்​ரேலுக்கு ஆதர​வாக செயல்​பட்​டனர்” என கூறுகின்​றனர்.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .