Ilango Bharathy / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்தைச் சேர்ந்த ஓங் டாங் சோரூட் என்பவர் தனது எட்டு மனைவிகளுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாட்டூ கலைஞரான இவர் 8 பேரை திருமணமம் செய்துள்ளதுடன் ஒரே வீட்டில் ஒன்றாக எவ்வித சண்டையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது 8 மனைவிகளும் சோரூட் மீது மிகுந்த காதலோடு, ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்த்ததும் காதல்… அடுத்து கல்யாணம் இதேபோன்று தான் சோரூட் வாழ்விலும் நடந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இது குறித்து அவரது மனைவிகள் கருத்துத் தெரிவிக்கையில் சோரூட்டின் குணம் தான் எங்களுக்குள் சண்டையே வராமல் இருக்க காரணமாக இருக்கிறது.
8 மனைவிகள் மீதும் பாரபட்சம் இல்லாத அன்புடன் சோரூட் இருக்கிறார் ”எனத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தாம் இரவு படுக்கையை திட்டமிட்டுப் பகிர்ந்து கொள்வதாகவும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
37 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
37 minute ago
43 minute ago
48 minute ago