2025 மே 15, வியாழக்கிழமை

AI ன் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களுக்கு ஆபத்து

Janu   / 2023 ஜூன் 05 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் முழுவதும் AI எனப்படும் Artificial Intelligence ன் வளர்ச்சி அபாயங்கள் குறித்து கூகுள் முன்னாள் எரிக் ஷ்மிட் எச்சரித்துள்ளார்.

தற்போதைய தொழில்நுட்ப உலகில் AI டெக்னாலஜியின் தாக்கம் அதிகரித்துள்ளது. Open AI வெளியிட்ட ChatGPT மற்றும் கூகுள் வெளியிட்டுள்ள BARD என, நாளுக்கு நாள் புதுப்புது AI தொழில்நுட்பங்கள் மக்களிடையே பிரதான முக்கியத்துவத்தை கொண்டுள்ளன.

கோப்புகள், ஆவணங்கள் எழுதுவது தொடங்கி, புகைப்படம் எடிட் செய்தல், வீடியோ உருவாக்குதல் என அசுர வேகத்தில் வளர்ந்து வரும் ஆர்டிபிசியல் இண்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் மனித இனத்திற்கு ஆபத்தாக முடியலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

AI தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ச்சிக்கு உதவுகிறதோ அதேயளவு ஆபத்தையும் உருவாக்குவதாகவும், AI தொழில்நுட்பம் குறித்த அறிவு பயங்கரவாத அமைப்புகளால் கைகொள்ளப்படும் பட்சத்தில் இது மனித இனத்திற்கு அழிவை ஏற்படுத்தும் ஒன்றாக மாறும் எனவும் கவலை வெளியிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .