Editorial / 2019 ஜூன் 05 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
விக்கிலீக்ஸின் நிறுவுநர் ஜூலியன் அசாஞ்சே, 2010ஆம் ஆண்டு வன்புணர்வு என்று கூறப்படுவது தொடர்பாக ஆஜராகமால் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்ற சுவீடன் அரச வழக்குத் தொடருநர்களின் கோரிக்கையொன்றை அந்நாட்டு நீதிமன்றமொன்று நேற்று முன்தினம் நிராகரித்துள்ளது.
அவுஸ்திரேலியப் பிரஜையான ஜூலியன் அசாஞ்சே, சுவீடனுக்கு நாடுகடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் ஏழாண்டுகள் இருந்த பின்னர் பிணை நிபந்தனைகளை மீறியமைக்காக பிரித்தானியாவில் 50 வார சிறைத்தண்டனையை தற்போது எதிர்கொள்கின்றார்.
வன்புணர்வுக் குற்றச்சாட்டை ஜுலியன் அசாஞ்சே மறுக்கின்ற நிலையில், நேற்று முன்தின தீர்ப்பு காரணமாக தற்போதைய நிலையில் பிரித்தானியாவிலிருந்து அவர் நாடு கடத்தப்படுவதை சுவீடன் அரச வழக்குத் தொடருநர் கோர முடியாது.
சதிக்கோட்பாடு குற்றச்சாட்டுகளில், ஜூலியன் அசாஞ்சேயில் நாடுகடத்தலை ஏற்கெனவே ஐக்கிய அமெரிக்கா கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், சுவீடனின் நாடுகடத்தல் கோரிக்கைக்கு முன்பதாக ஐக்கிய அமெரிக்காவின் கோரிக்கையை பிரித்தானியா நிறைவேற்றினால், ஐக்கிய அமெரிக்காவுக்கு ஜுலியன் அசாஞ்சே அனுப்பப்படுவார்.
வன்புணர்வு விசாரணையை 2017ஆம் ஆண்டு சுவீடன் அரச வழக்குத் தொடருநர்கள் கைவிட்டிருந்தபோதும், இவ்வாண்டு ஏப்ரலில் தாம் வழங்கிய ஜுலியன் அசாஞ்சேக்காக புகலிடத்தை மறுத்து பிரித்தானியப் பொலிஸாரை அவரைக் கைது செய்ய அனுமதித்தைத் தொடர்ந்து, வன்புணர்வு விசாரணையை சுவீடன் அரச வழக்குத் தொடருநர்கள் மீளத் திறந்திருந்தனர்.
8 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago