2025 நவம்பர் 05, புதன்கிழமை

அசாம், பீகார் வெள்ளம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்தது

Editorial   / 2019 ஜூலை 25 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது. ஏறக்குறைய 12,400,000 மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீகாரில் கடந்த இரண்டு நாட்களாக சராசரியை விட அதிகமான மழை கொட்டி தீர்த்ததால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. பீகாரில் மட்டும் மழை, வெள்ளத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உள்ளது. இவர்களில் 17 பேர் டெங்கு பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அசாமில் வெள்ளத்தில் உயிரிழந்த 74 பேரில் ஆறு பேர் டெங்குவால் பலியானவர்கள்.

பீகாரைப் பொருத்தவரை மோசமாக பாதிக்கப்பட்ட சீதாமர்கி மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 இல் இருந்து 37 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு முதல் நான்கு மணி நேரத்திலேயே உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்ததாக குறித்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அசாமில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் நீரில் மூழ்கி உள்ளதாக அசாம் பேரிடர் மேலாண்மை கழகம் தெரிவித்துள்ளது. இதனால் 38.82 3,882,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X