Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 09 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிஎன்ஏ விவரக்குறிப்பு மற்றும் கருவிழி ஸ்கேனிங் போன்ற நவீன மருத்துவக் கருவிகள் சீனாவில் வெகுஜன அளவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், வலுக்கட்டாயமாக அறுவடை செய்யப்பட்ட மனித உறுப்புகளை நாட்டின் மனிதாபிமானமற்ற சர்வதேச வணிகத்தை மேலும் மேம்படுத்த சீனா இந்தக் கருவிகளைப் பயன்படுத்துகிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திபெத் பிரஸ் தெரிவித்துள்ளது.
கிங்காய் மாகாணத்தில் உள்ள மக்களின் கருவிழிகளை வெகுஜன ஸ்கேன் செய்வது பற்றிய ஒரு பிரச்சாரத்தையும் திபெத்திய மக்களின் டிஎன்ஏ விவரக்குறிப்புக்காக அவர்களின் இரத்த மாதிரியைப் பற்றிய பிரசாரத்தையும் சீனா நடத்திவருவதாக குறித்த ஊடகம் தெரிவிக்கிறது.
இந்த விசேட மக்கள் தொகை விவரக்குறிப்பு பிரச்சாரங்கள் மனித உரிமை குழுக்கள் மற்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் அரசியல் தலைவர்களிடமிருந்து எதிர்ப்பை ஈர்த்துள்ளன என்றும் திபெத் பிரஸ் குறிப்பிடுகிறது.
2016ஆம் ஆண்டு முதல் திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில், மக்களின் டிஎன்ஏ சேகரிப்பு நிகழ்ச்சிகளை சீன அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
திபெத்திய மக்கள் தொகையில் குழந்தைகள் உள்ளிட்ட மூன்றில் ஒரு பகுதியை இந்த திட்டம் ஏற்கனவே உள்ளடக்கியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஒரு முக்கிய நடவடிக்கை குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ மற்றும் அறிவிக்கப்படாத சிறைகளில் வசிப்பவர்களிடமிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ மற்றும் இரத்த விவரங்களின் தரவுத்தளங்களின் அடிப்படையில் சீனாவின் மனித உறுப்பு அறுவடை வணிகமானது.
சிறுநீரகங்கள், கல்லீரல், கருவிழி, கணையம், மண்ணீரல், நுரையீரல் மற்றும் இதயம் போன்ற மனித உறுப்புகள் விரைவாகக் கிடைப்பதால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உலகின் மிகப்பெரிய மையமாக சீனா உருவெடுத்துள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது உறுப்புகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
பணக்கார மேற்கு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கு நான்கு மணிநேரம் போன்ற குறுகிய அறிவிப்பில் சரியாக பொருந்தக்கூடிய உறுப்புகளை வழங்க, கைதிகளின் இரத்தம் மற்றும் டிஎன்ஏ சுயவிவரத்தின் நாடு தழுவிய தரவு வங்கி, பயன்படுகிறது உய்குர் வம்சாவளியைச் சேர்ந்த நாடுகடத்தப்பட்ட வைத்தியர் என்வர் டோஹ்தி புக்டா சாட்சியமளித்தார்.
"சீனாவில் மனித உறுப்புகளை வலுக்கட்டாயமாக அறுவடை செய்தல்" என்ற தலைப்பில், புது டெல்லியின் ஹிமாலயன் ஆசியா ஆய்வுகள் மற்றும் ஈடுபாட்டிற்கான மையம் சமீபத்தில் நடத்திய சர்வதேச வலையரங்கிலேயே அவர் இதை குறிப்பிட்டார் என என்று திபெத் பிரஸ் தெரிவித்துள்ளது.
"கல்லீரல் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் பல மாதங்கள் அல்லது வருடங்கள் காத்திருந்து அமெரிக்கா போன்ற நாடுகளில் நூறாயிரக்கணக்கான டொலர்களை செலவழிக்க வேண்டியிருக்கும் போது, அனுமதிக்கப்பட்ட நான்கு மணி நேரத்துக்குள் சில ஆயிரம் டொலர்களுக்கு பொருத்தமான உறுப்புகளை வழங்கும் சீன வைத்தியசாலைகள் உள்ளன என புக்தாவை மேற்கோள் காட்டி திபெத் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ பயிற்சியாளர்கள் டிஎன்ஏ தரவுகளை சேகரிக்கும் பீஜிங்கின் நடைமுறை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
டொராண்டோவை தளமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழு, கட்டாய உறுப்பு அறுவடையை எதிர்த்துப் போராடுவது மற்றும் தடுப்பது குறித்த உலக உச்சி மாநாட்டின் அமைப்பாளர்களால் சீன நிறுவனங்களைப் புறக்கணிக்க முன்மொழியப்பட்டுள்ளது என்று கூறியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago